
கிளிநொச்சியில் ரயில் மோதி இளைஞர் பலி!!
கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி ரயிலுடன் இளைஞன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கிளிநொச்சி மலயாளபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்