இலங்கையில் போக்குவரத்து குற்றங்களுக்கு புள்ளியிடும் முறை விரைவில் அறிமுகம்!
மோட்டார் போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் செலுத்த இணைய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு புள்ளியிடும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மோட்டார் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட இதனைத் தெரிவித்தார்.
வாகன சாரதிகள் தண்டப் பணம் விதிக்க எளிதான பண முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“வாகன சாரதி ஒருவருக்கு 22 புள்ளிகள் இருக்கும். ஒவ்வொரு குற்றத்திற்கும் புள்ளிகள் கழிக்கப்படும். சாரதி ஒருவர் பூஜ்ஜிய புள்ளிகளை எட்டும்போது, சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படும்.
தேவையான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று சாரதி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்” என்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட குறிப்பிட்டார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.