கிழக்கில் இன்று மழை!
பிந்திய தகவல் – 2020-06-23
கிழக்கு மாகாண கடற்கரைகளில் மேகமூட்டம் அதிகமாக காணப்படுவதால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் 70KM/H – 80KM/H வேகத்தில் காற்று வீசும்.
2020-06-21
இன்று மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 75mm அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றுமாலை 2.00 மணிக்கு பின்னர் பெய்யக்கூடும்.
2020-06-15
இன்று மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 40KM/H – 50KM/H வேகத்தில் காற்று வீசும்.
2020-06-13
இன்று தென் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் வேகம் 50KM/H – 60KM/H வரை இருக்குமெனவும், அது மேலும் 60KM/H – 70KM/H வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
2020-06-12
மேல்,வடமேல்,சப்ரகமுவ,மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50mm க்கு அதிகமான மழை வீழ்ச்சிக்கு சாத்தியமுள்ளது.
2020-06-09
மேல்,வடமேல்,சப்ரகமுவ,மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 40KM/H – 50KM/H வேகத்தில் காற்று வீசும்.
2020-06-07
நிலவிவரும் மழையுடனான காலநிலை இனியும் சிலநாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல்,வடமேல்,சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 50mm க்கு அதிகமாக மழை பெய்யக்கூடும் என மேலும் கூறப்பட்டது.
2020-06-06
ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று காலநிலை படிப்படியாக நாட்டில் தாக்கம்செலுத்தவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது
இந்நிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல், மாகாணங்களிலும் நுவரெலிய, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், ஊவா மாகாணதிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழைக்கு சாத்தியம் உண்டு.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் ஹம்பந்தோட்டை மாவட்டத்திலும் 40KM/H – 50KM/H வேகத்தில் காற்று வீசும்.