சற்றுமுன்:இன்று இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 4 பேர் பலி!
இதற்கமைய கொவிட் 19 தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜகிரிய பகுதியில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 51 வயதான ஆண் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தார்
அத்துடன் கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தார்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்நதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம் , கம்பஹா உடுகம்பல பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் மரணமானார்.
கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் 19 நியுமோனியா நிலை காரணமாக அவர் உயிரிழந்தார்.
55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்தார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானமை தெரியவந்துள்ளது.
அவர் குறித்த வேறு எந்தவிதமான தகவலும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.