
இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்தது!
இன்றைய திகதிப்படி(2020-8-5) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2834 ஆக காணப்படுகின்றது.
கடந்த வாரத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்திருந்தபோதும் நேற்று முன்தினம் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இனம் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இனம் காணப்பட்டுள்ளது .
இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் 299 பேர் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் 2524 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போதுவரை 11 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.