முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்ந்து கிலோ மீற்றருக்கு 50 ரூபாய் அறவிடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் மற்றும் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் சுதில் தில்ருக் தெரிவித்துள்ளார்.
10 வருட காலமாக கிலோ மீற்றருக்கு 40 – 45 ரூபாய் அறவிடப்படுகின்றது.
கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை தாக்கிக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இதுவரையில் தற்போதைய அரசாங்கத்தால் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. வேறு வழியில்லாத காரணத்தினாலேயே இந்த கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து வேறு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் வாகனங்களுக்கான மேலதிக பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.