
அக்கா தங்கை இருவரையும் காதலித்து தங்கையை சீரழித்த யாழ் இளைஞன்!
யாழ்ப்பாணத்தில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள குடும்பம் ஒன்றில் அக்கா, தங்கை இருவரையும் காதலித்து கண்டம் பண்ணியுள்ளார். இந் நிலையில் தங்கை தற்போது அவரால் கர்ப்பமான நிலையில் அவரது பல திருவிளையாடல்கள் வெளிவந்துள்ளன.
29 வயதான குறித்த அரச ஊழியர் உயர் தொழில்நுட்பக் கல்லுாரியில் கல்வி கற்றுவந்த தனது வீட்டுக்கு அருகில் உள்ள 23 வயதான யுவதியை காதலித்து வருவதும் அந்த யுவதியையே திருமணம் முடிக்கப் போகின்றார் என்பதும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் தெரிந்த விடயம். இந் நிலையில் அந்த யுவதியின் தங்கையான 20 வயதான இளம் பெண் ஓரிரு நாட்களுக்கு முன் திடீர் சுகவீனமடைந்து தனியார் வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட போது அவர் கர்ப்பம் என வைத்தியரால் கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் யுவதியின் குடும்பத்தினர் மேற்கொண்ட விசாரணையின் போது அக்காவின் காதலனே யுவதியை கர்ப்பமாக்கிய விடயம் தெரியவந்துள்ளது. ”எனது காதல் என்று தெரிந்தும் நீ ஏன் அவனிடம் இவ்வாறு நடந்து கொண்டாய் ” என அக்கா தனது தங்கையை கேட்ட போது ”உன்னை பகிடிக்கு லவ் பண்ணுவதாயும் என்னையே உயிருக்குயிராய் நேசிப்பதாயும் அவர் கூறினார்” என தங்கை கூறியுள்ளாராம்.
இந் நிலையில் அரச ஊழியரான மன்மதனின் மீது காதலியான அக்கா கொலை வெறியில் உள்ளார்.. காதலியின் தங்கை கர்ப்பம் என அறிந்து தனது வீட்டில் இருந்து தலைமறைவாகிய காதலன் இன்று அலுவலகம் வந்துள்ளார். இன்று காலை அவரது அலுவலகத்திற்கு காதலி வந்து பிரளயம் செய்துவிட்டுச் சென்றதாகவும் தெரியவருகின்றது.
சாவகச்சேரியில் காதலனின் அம்மம்மா தனியே வசித்து வருகின்றாராம். அவரது வீட்டுக்கு என்னை கொண்டு சென்றது போல் எனது தங்கையை கொண்டு சென்றாயா என கேட்டு தாக்க திரிந்ததுடன் காதலனின் அம்மம்மாவையும் தரக்குறைவாக திட்டித் தீர்த்துள்ளாராம் காதலி.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.