97ஆவது வயதிலும் சுறுசுறுப்பாக விளையாடும் உலகின் மிக வயதான டென்னிஸ் வீரர்!
97ஆவது வயதிலும் சுறுசுறுப்பாக விளையாடும் உலகின் மிக வயதான டென்னிஸ் வீரர்
உக்ரைனைச் சேர்ந்த மிக வயதான டென்னிஸ் வீரரான Stanislavskyi, தமது 97 வது வயதிலும், சுறுசுறுப்பாக போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
30ஆவது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய இவர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெச்சூர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். உலகிலேயே மிகவும் வயதான டென்னிஸ் வீரர் என்ற பிரிவில் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் Mallorca-வில், வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள சூப்பர் சீனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தற்போது தீவிர பயிற்சி பெற்று வருகிறார். 100 வயது வரை வாழ வேண்டும் என்பது தான் தமது இறுதி இலக்கு என Stanislavskyi தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.