fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

ஆசிரியை ஒருவரின் வண்டவாளத்தை அம்பலமாக்கிய சுவிஸ் நபர்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரால் பாதிக்கப்பட்டதாக கூறி, சுவிற்சர்லாந்து வாசியொருவர் நீதி கோரியுள்ளார்.

சுவிற்சர்லாந்து வாசியொருவரை பதிவு திருமணம் செய்து, அதை மறைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம் செய்து இரண்டு மாப்பிள்ளைகளிற்கும் தண்ணி காட்டிய பெண், ஒரு ஆசிரியை என கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்த சேர்ந்த குறித்த ஆசிரியையொருவரின் ஒன்றுவிட்ட சகோதரி சுவிற்சர்லாந்தில் திருமணம் முடித்திருந்தார். ஆசிரியை அப்போது பல்கலைகழக மாணவியாக இருந்துள்ளார். எனினும் அப் போதே, அக்காவின் கணவருடன் காதலுறவை ஏற்படுத்தியுள்ளார். இந்த தகவலறிந்த அக்கா, தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.

தொடர்ந்து, இலங்கை வந்த அக்கா கணவர் குறித்த ஆசிரியையை பதிவு திருமணம் செய்துள்ளார். சுமார் 6 வருடங்களின் முன்னர் இருவரும் திருமணம் முடித்ததாக சொல்லபப்டுகின்றது.

இந்த திருமண உறவு நீடித்துக் கொண்டிருந்த போதே, ஆசிரியை வேறு இருவருடன் திருமணம் செய்ய முயன்று முக்கிய சடங்கு வரை முடிந்திருந்தது. இந்நிலையில் சுவிஸ் கணவன், விடயத்தை கண்டறிந்து உடனே தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சில வாரங்களின் முன்னர் குறித்த ஆசியை வேறு ஒருவரை திருமணம் முடித்துள்ளார். திருமணத்திற்கான சேலை வாங்கிய போது, சுவிஸ் கணவனுடன் தொலைபேசியில் பேசியபடியே சேலையை தெரிவு செய்தார். அத்துடன் இளைய சகோதரியின் பல்கலைகழக பட்டமளிப்பிற்கு என கூறியே சேலை தெரிவு செய்தபோது அவர் ஆடை வாங்க செலவிட்ட பணத்தையும், சுவிஸ் கணவனே அனுப்பி வைத்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் மிக நெருக்கமானவர்களுடன் நடந்த திருமணம் பற்றிய விபரங்களை ஆசிரியையிடம் பயிலும் மாணவன் ஒருவர் சுவிஸ் கணவரிற்கு முகநூல் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து, சுவிசிலிருந்து பகீரத பிரயத்தனப்பட்டு மனைவியின் புதிய கணவரின் தொடர்பை பெற்ற சட்டபூர்வ கணவன், அவரை தொடர்பு கொண்டு தகவல் வழங்கியதையடுத்தே, தான் ஏமாற்றப்பட்டதை புதிய கணவர் அறிந்துள்ளார்.

இதனையடுத்து மனைவியை தாக்கி, வாகனத்தில் ஏற்றிச் சென்று மனைவியின் பெற்றோரிடமே ஒப்படைத்ததுடன் விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை தனது மனைவியின் வீட்டின் பழைய புகைப்படத்தையும், தன்னை திருமணம் செய்த பின்னர் வீட்டின் புகைப்படத்தையும் பதிவிட்டு, மனைவிக்காக 40 இலட்சம் ரூபாவிற்கு அதிக பணத்தை செலவிட்டதாகவும், தன்னை ஏமாற்றிய மனைவி அவற்றை மீள தனக்கு தர வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட சுவிஸ் கணவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button