காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை தயாரித்துள்ள ஸ்பெயின் நிறுவனம்!
காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை ஸ்பெயினை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது.
வெப்பக்காற்றை குளிரூட்டினால் உறைவு மூலம் உருவாகும் நீர் துளிகளை சேகரிக்கும், மின்சாரத்தில் இயங்கும், இந்த கருவியை, அக்வேயர் என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. குடிநீர் பஞ்சம் அதிகம் இருக்கும் நமீபியா மற்றும் லெபனானில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இந்த கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன.
1990-களில் ஸ்பெயினை வாட்டிய கடுமையான வறட்சி காலத்தில் இந்த கருவியை உருவாக்கியதாக கூறுகிறார் 82 வயது பொறியாளர் என்ரிக் வெய்கா. ஒரு நாளைக்கு 50 முதல் 75 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் இந்த கருவிகள் நீர் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.