செவ்வாயை ஆய்வு செய்யச் சீனா அனுப்பிய விண்கலத்தின் ஊர்தி எண்ணூறு மீட்டர் தொலைவுக்குப் பயணம்!
செவ்வாயை ஆய்வு செய்யச் சீனா அனுப்பிய விண்கலத்தின் ஊர்தி, கரடுமுரடான நிலப்பரப்பிலும் எண்ணூறு மீட்டர் தொலைவுக்குப் பயணித்துள்ளது.
சீன விண்வெளி ஆய்வு அமைப்பு அனுப்பிய சுராங் விண்கலம் செவ்வாயின் மேலே சுற்றுப்பாதையில் 379 நாட்களாகச் சுற்றி வருகிறது. அந்த விண்கலத்தில் இருந்து செவ்வாயில் இறங்கிய ஊர்தி 82 நாட்களில் பாறைகள், பள்ளங்கள், குன்றுகள் நிறைந்த பரப்பில் 808 மீட்டர் தொலைவுக்குப் பயணித்துள்ளது.
அந்த ஊர்தியின் பின்புறத்தில் உள்ள கேமராவால் எடுக்கப்பட்ட படத்தைச் சீன விண்வெளி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.