மின்சார ஸ்கூட்டர்களின் விலை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்பு!
மின்சார வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் மின்சார ஸ்கூட்டர்களின் விலை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.
மின்சார வாகனத் தயாரிப்புக்கான ஊக்குவிப்புத் திட்டத்தின்படி பேருந்துகளைத் தவிர, மற்ற அனைத்து வாகனங்களுக்கும் ஒரு KWh-க்கு பத்தாயிரம் ரூபாய் என்கிற அளவில் முன்பு மானியம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஒரு KWh-க்கு 15 ஆயிரம் ரூபாய் என மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை ஏழாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என்பதால், இவ்வகை வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வருவதற்கு உதவும் என வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.