வர்த்தக நிலையத்துக்குள் நிர்வாணமாக நுழைந்து பொருட்களை திருடிய நபர்!
குருணாகல், உஹுமிய பிரதேசத்தில், மூடப்பட்டிருந்த சில்லறை விற்பனை நிலையமொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த நபரொருவர் பொருட்கள் சிலவற்றை திருடிச்செல்லும் காட்சி அங்கிருந்த சிசிரீவி கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் நாம் வினவியபோது, சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் வீரம்புகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.