யாழில் நேற்றிரவு 3 கடைகளி ன் கூரையை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்டவர் சிக்கினார்!
வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரையை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை வீதியில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டு இடம்பெற்றிருந்தது.
இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சுழிபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பால்மா வகைகள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.
திருட்டுச் சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள சந்தேக நபர், தான் தனியவே திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.