பச்சிளம் சிசுவை கொலை செய்து எரியூட்டிய தாய்!
கந்தளாய் – பேராறு பிரதேசத்தில், பச்சிளம் சிசுவை கொலைசெய்து, தீ வைத்து எாித்த தாய் எதிர்வரும் 28 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபரான பெண் நேற்று செவ்வாய்க்கிழமை கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் நேற்று முன்தினம் மாலை, இந்த சிசுவை குறித்த பெண் கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
அத்தோடு கணவர் வெளிநாடு சென்றதன் பின்னர் பிறிதொரு நபருடன் ஏற்பட்ட தொடர்பினால் சந்தேகநபரான பெண் கர்ப்பமடைந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சிசுவின் தலையைில் தாக்கிக் கொலைசெய்து அதன் பின்னர் குறித்த பெண் எரியூட்டியுள்ளதாக அவரது மாமியார் (கணவரின் தாய்) தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.