ஆப்கானில் ராணுவத்தினர் குவியல் குவியலாக விட்டுச் சென்ற அதி நவீன ஆயுதங்கள்: கைப்பற்றிய தாலிபன்!
ஆப்கானில் ராணுவத்தினர் விட்டுச் சென்ற குவியல் குவியலான அதி நவீன ஆயுதங்களை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கி வாகனங்களும் பீரங்கிகளும் ராணுவ ஹெலிகாப்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 89 பில்லியன் டாலர் முதலீட்டில் அமெரிக்கா ஆப்கான் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கியிருந்தது.
இவை தாலிபன்களுக்கு எதிரான யுத்தத்தில் 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு தாலிபன்களை முன்னேற விடாமல் தடுத்து வந்தன. இப்போது இந்த அதிநவீன ஆயுதங்களை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.இதனால் தாலிபன்களின் ஆயுத பலம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.