14 வயது சிறுமியை சங்கிலியால் கட்டி கோழி கூடு ஒன்றில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய தந்தை!
14 வயது சிறுமியை சங்கிலியால் கட்டி கோழி கூடு ஒன்றில் அடைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரி நுரைச்சோலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி கட்டிவைக்கபட்டிருந்த நிலையில்,சங்கிலியை அவிழ்த்துக் கொண்டு அருகில் உள்ள வீட்டில் உணவு கேட்டதாகவும், இதனை அறிந்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அயலவர்கள் மூலம் கிடைத்த தகவலின்படி நுரைச்சோலை பிரதான பொலிஸ் அதிகாரி நிலந்த பண்டார உள்ளடங்கிய ஒரு குழு சிறுமியை மீட்டதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயார் அருகிலுள்ள வீட்டில் தனித்தனியாக வசித்து வருவதாகவும், அவருக்கு மேலும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், குறித்த சிறுமி ஏழு ஆண்டுகளாக தந்தையின் சகோதரியின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுமியின் தந்தை தெரிவிக்கையில், சிறுமிக்கு எவ்வளவு உணவு வழங்கப்பட்டாலும், அவள் அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று உணவைத் திருடுவாள் என்றும், ஆரம்ப நாட்களில் அவள் பள்ளிக்குச் செல்வதற்கு பிடிவாதம் பிடித்ததால் சிறுமி தனது சகோதரியின் வீட்டில் தங்கவைத்ததாக சிறுமியின் தந்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை மற்றும் அவருடைய அத்தை கைது செய்யபட்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.