
தனது 9 வயதான தனது மகளின் உடலை ஸ்பரிசம் செய்தற்காக நன்பனை அடித்து கொன்ற தந்தை!
மத்துகம பிரதேசத்தில் தனது நண்பனை தாக்கிக் கொலைசெய்த சந்தேக நபரொருவரை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டுக்குவந்த நண்பர் 9 வயதான தனது மக்களின் உடலை ஸ்பரிசம் செய்துள்ளதாகவும் இதனை அவதானித்த தந்தை கோபத்தில் தனது நண்பரை தாக்கிக் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்த நபர் மத்துகம நாபிட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை மேற்கொண்டதாகக் கூறப்படும் 33 வயதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு மத்துகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சரீரம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.