யாழில் சகோதரர்கள் இருவரின் கொடூர செயல்! கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காணிப்பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்கள் இருவர் இணைந்து குறித்த குடும்பஸ்தரை கம்பியால் தாக்கி கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புள்ளி என்று அழைக்கப்படும் 45 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் உள்ளவரின் வயல் காணியை சகோதரர்கள் இருவர் பராமரித்து வருகின்றனர். இன்றைய தினம் அந்தக் காணியில் மற்றொருவர் உள்ளதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்று முரண்பட்டதுடன் கம்பியாலும் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்திய இரு சகோதரர்களும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.