
எதிர்வரும் 17ஆம் திகதியில் இருந்து அதிரடியாக அமுலுக்கு வரும் தடை!
எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமண வைபங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறித்துள்ளார்.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேநேரம், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோருக்கு ஒன்றுகூட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறும் அரசாங்கம் கோருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.