
சற்றுமுன்: அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு! – அமைச்சரவை அங்கீகாரம்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை இணைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் இருந்து பல கட்டங்களின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.