
பண சிக்கலால் அந்தரங்க புகைப்படங்களை விற்கும் சுவிஸ் தாதி!
முதியோர் இல்லம் ஒன்றில் பணியாற்றும் சுவிஸ் செவிலியர் ஒருவர் தமது நிர்வாண புகைப்படங்களை குறிப்பிட்ட ஒரு இணைய பக்கத்தில் வெளியிட்டு கூடுதல் வருமானம் ஈட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கம் போன்று அந்தரங்க புகைப்படங்களுக்காகவும் ஒரு பக்கம் செயல்பட்டு வருவதுடன்,
உலக அளவில் பல பிரபலங்கள் தங்கள் அந்தரங்க புகைப்படங்களை அதில் வெளியிட்டு, பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆனால் கொரோனா காலகட்டத்தில் வேலை வாய்ப்பு இழந்து, அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல்,கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான பலர் தற்போது தங்களுக்கு என குறிப்பிட்ட அந்த இணைய பக்கத்தில் கணக்கை தொடங்கி கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சுவிட்சர்லாந்தில், முதியோர் இல்லம் ஒன்றில் செவிலியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர்,தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த இணைய பக்கத்தில் தமது அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.பொதுவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர், நண்பர்கள் மற்றும் பலராலும் பாராட்டப்பட,
தற்போது இந்த இணைய பக்கத்தில் கட்டணத்திற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் மாதம் 2,000 பிராங்குகள் வரை கூடுதல் வருமானம் ஈட்டிவருவதாக குறிப்பிடும் அவர்,
பணம் மட்டுமல்ல தமது குறிக்கோள், பொழுதுபோக்காகவே இதை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.