ஜனாதிபதியின் உத்தரவை இரத்து செய்ய முடியாது – உயர் நீதிமன்றம்
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை இரத்து செய்யவோ அல்லது திருத்தியமைக்கவோ அரசியல் அமைப்பில் அதிகாரம் வழங்கப்படவில்லை என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவிப்பை தொடர்ந்து சகல அதிகாரங்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாற்றப்படுவதாக மேலும் கூறினார். உயர் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் தேர்தல் திகதி தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையின் போது இந்த கருத்து கூறப்பட்டது.