தீர்ப்பு நாள்! – இன்று பிற்பகல் 3 மணி
இலங்கை பாராளுமன்ற தேர்தல் திகதி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உகந்ததா என இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் உட்பட 5 நீதியரசர்கள் முன்னிலையில் இம்மனுக்களின் ஏற்புடைமை தொடர்பில் கடந்த 10 நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தன.
தேர்தல் பிற்போடப்பட்டமையால் பல அரச நியமனங்கள் தாமதப்படுத்தப்படுவதாக சம்பந்தப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிந்திய செய்தி
தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அதாவது இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.