காதல்- வெளிநாட்டு மாப்பிள்ளை-யாழ். இளம் பெண் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது!
தென்மராட்சி மட்டுவில் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவத்தின் பின்னணியில், யுவதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை இருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மட்டுவில் கிழக்கை சேர்ந்த 22 வயதான யுவதி கடந்த 21ஆம் திகதி வீட்டில் உயிரை மாய்திருந்தார். பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்ற நேரத்தில் வீட்டு சுவாமியறைக்குள் உயிரை மாய்த்தார்.
யுவதியின் மரணம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணை நடத்தி சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், யுவதியை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்வதற்காக காதலை துறக்கும்படி வற்புறுத்தி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.