
நாளை பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த ராஜபக்சே! 14இல் அமைச்சரவை பதவியேற்பு!!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள அமைச்சரவை எதிர்வரும் 14ம் திகதி வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக அறியவருகின்றது.
புதிய அமைச்சரவையில் 26-30 அமைச்சர்கள் வரை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் முதலாவது பாராளுமன்ற அமர்வு 20ம் திகதி நடைபெறவுள்ளது.