
முக்கிய செய்தி: இலங்கையின் பொது தேர்தல் திகதி சற்றுமுன்னர் அறிவிப்பு
இலங்கையின் நாடளுமன்றத்துக்கான தேர்தல் திகதி தேர்தல் ஆணைக்குழு தலைவரால் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 05 ம் திகதியன்று நாடு முழுவதும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும்.
ஏற்கனவே இரண்டு தடவைகள் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய திகதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தபோது தேர்தல் திகதி ஏப்ரல் 25 ஆக அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா சூழ்நிலைகாரணமாக ஜூன் 20ம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது.
தேர்தல் திகதிக்கெதிராக கொண்டுவரப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.