பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்!
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு அனைத்து உபவேந்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில விரிவுரைகளை Online தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
களனி பல்கலைகழகம் கடந்த 04ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
கொரோனா அபாயம் காரணமாக களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகம் என்பன மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இவற்றை தவிர்ந்த வேறு எந்தவொரு பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.