
இன்று ஆரம்பமாகும் ‘GOVPAY’ திட்டம்
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GOVPAY’ திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும், அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.