சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பவர்களை கைது செய்ய சிறப்புக்குழு!
கப்பம் கோருவோர், போதைப்பொருள் வர்த்தகர்கள், சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோரை தேடிச் சென்று கைது செய்வதற்கான பிரிவொன்றை ஸ்தாபிக்க காவல்துறை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தென்பகுதியை மையப்படுத்தி போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர்களை கைது செய்வதற்காக குறித்த காவல்துறை பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
விரைவில் ஸ்தாபிக்கப்படவுள்ள குறித்த காவல்துறை பிரிவிற்காக தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.