நாட்டில் சூன் பான் எனும் கோவிட் கொத்தணி உருவாகலாம் – எச்சரிக்கை தகவல்!
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வெதுப்பக விற்பனையாளர்கள் தங்கள் விநியோகத்தில் ஈடுபட்டால் நாட்டில் (‘சூன் பான்’) என்ற கோவிட் கொத்தணி வெளிப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சம்மேளனம் நேற்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சம்மேளனத் தலைவர் என்.கே ஜெயவர்தன இது தொடர்பில் வெதுப்பக .உற்பத்தியாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அனைத்து வெதுப்பக தயாரிப்பு விற்பனையாளர்களும் தொழில்களில் ஈடுபடும் போது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
விற்பனையாளர்கள் பணத்தை தொட்ட பின்னர் வெதுப்பக உணவுப்பொருட்களை தொடக்கூடாது. இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, சூன் பான் விற்பனையாளர்கள் தெளிவான செலோபேன் பைகளில் அடைத்து வைக்கப்பட்ட வெதுப்பக பொருட்களை பாதுகாப்பு முறையில் விற்பனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.