fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

பெண்களின் பொலிவை குறைக்கும் சமூக வலைத்தளங்கள்!

இளைஞர்களையும் இணையதளத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிறது. பலவித தகவல்களை அவர்கள் இணையதளத்தில் இருந்தும் சமூக வலைதளங்களில் இருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள்.

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதில் இருந்து இன்று மனசே சரியில்ல என்று தங்கள் மன உணர்வை வெளிப்படுத்துவது வரை எல்லாவற்றையும் உடனுக்குடன் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பதிவிடுகிறார்கள். இதனால் நன்மைகள் இருக்கும் அளவுக்கு தீமைகளும் இருக்கின்றன, என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம். எப்போதும் பேஸ்புக்கில் நுழைந்தபடி இருப்பவர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறதாம். தொடர்ந்து பேஸ்புக்கில் உலவிக்கொண்டே இருப்பவர்கள் தங்களது தோற்றத்தை மற்றவர்களுடன் அதிகமாக ஒப்பிடுகிறார்களாம். இப்படியெல்லாம் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வை 881 பெண்களிடம் நடத்தி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களா, அவர்கள் உருவம் பற்றிய கேள்விகள் என்ற ரீதியில் இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் நேரம் தவறி உண்பதற்கும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரிடையான தொடர்பு இல்லை. ஆனால் அதிக நேரம் இத்தகைய வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களின் உருவத்தில் அதாவது தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்று பெட்யா எக்ளர் தெரிவிக்கிறார். இவர் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோவ் என்னும் இடத்தில் உள்ள ஸ்ட்ரேத்க்ளைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

பிறர் படங்களை வலைத்தளங்களில் பார்க்கும்போது அந்த உருவத்துடன் தங்களது உருவத்தையும் பெண்கள் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறார்கள், இதனால் அவர்கள் மனத்தில் அதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன என்கிறார் ஒகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூசுப் கல்யாங்கோ. இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு மெலிய வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதிகம் பேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.

இப்படி அதிக நேரத்தை சமூக வலைதளத்தில் போக்குவதாலேயே இவர்களின் தோற்றப் பொலிவு மங்கிவிடுகிறது. தோற்றம் சரியாக இல்லை என்று எண்ணி இவர்கள் மன வருத்தம் அடைகிறார்கள். இதனால் உணவு உண்பதில் கவனம் செல்வதிவதில்லை. அது அவர்களது மனநிலையிலும் உடம்பிலும் ஆரோக்கிய குறைவை உருவாக்குகிறது என்கிறது அந்த ஆய்வு. ஆகவே பெண்களின் தோற்ற பொலிவை குறைப்பதில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அதிக பங்காற்றுகின்றன என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்தும் கருத்தாகும்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button