ஆண்களின் பாலுணர்வை தூண்டும் உணவுகள் எவை?
பாலுணர்வைத் தூண்டும் பலவித உணவுகள் நம்மிடையே உள்ளன. ஆண்மையை அதிகரிக்க இந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்வது நல்லது.ஆண்மை என்பது பொதுவாக வீரம், பலம் என்று பல்வேறு அர்த்தத்தைக் குறித்தாலும், ஆண்களின் பாலுணர்வை அளக்கும் அளவுகோலாகவே பொதுவாக பார்க்கப்படுகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆண்மை குறைபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த நிலைக்கான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். நீங்கள் சில இயற்கை தீர்வுகளையும் முயற்சித்து உங்கள் ஆண்மையை அதிகரிக்க முடியும். சில சரியான உணவுகள் உங்கள் பாலுணர்ச்சியை தூண்டும் விதத்தில் சிறப்பாக உதவலாம்.
பாலுணர்ச்சியைத் தூண்டும் பலவித உணவுகள் நம்மிடையே உள்ளன. உங்கள் ஆண்மை குறைபாட்டை போக்கும் சிகிச்சையில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் விரைவில் உங்களால் ஒரு வேறுபாட்டை உணர முடியும். அத்தகைய உணவுகள் சிலவற்றை இப்போது நாம் காணலாம்.
பிஸ்தா:
ஆண்மை குறைபாட்டைப் போக்க பிஸ்தா ஒரு வரப்பிரசாதம். விறைப்புத்தண்மை குறைபாடு, பாலியல் அதிருப்தி, பாலுணர்ச்சி செயல்பாடு, புணர்ச்சி முறை, பாலியல் விருப்பம் மற்றும் ஒட்டுமொத்த பாலியல் திருப்தி போன்றவற்றை மேம்படுத்த பிஸ்தா உதவுகிறது. தினமும் ஒரு கை நிறைய பிஸ்தா எடுத்து உட்கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.
சிப்பிகள்:
சிப்பி, ஜின்க் சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் டெஸ்டோஸ்ட்டிரோன் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. உங்கள் வீரியத்தை அதிகரிக்க சிப்பிகள் ஒரு சிறந்த தேர்வு.
தர்பூசணி:
சிட்ருலினின் சிறந்த ஆதாரமாக விளங்கும் தர்பூசணி, நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை ஊக்குவிக்கிறது. நைட்ரிக் ஆக்ஸைடு ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
செர்ரி பழம்:
சிவப்பு, நீலம், மற்றும் ஊதா நிற செர்ரி பழங்கள் தமனிகளில் இருந்து பிரீ ரேடிக்கிள்களை அகற்றுகிறது, அதனால் அவை தளர்த்தப்பட்டு, இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதனால் ஆண்கள் விறைப்புத்தன்மை அடைந்து அதனை நீண்ட நேரம் நிர்வகிக்க முடிகிறது.
பூண்டு:
பூண்டு இரத்த குழாய்களை தளர்த்தி, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தி அதிகரிக்கிறது. இது ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. ஆகவே தினமும் உங்கள் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம்
தக்காளி:
ஆண்களில் வீரியத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய உணவு தக்காளி. தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது ஒரு சக்தி மிகுந்த ஆன்டிஆக்சிடெண்ட் ஆகும். இது ஆண்களில் ப்ரோஸ்டேட் என்னும் ஆண்மை சுரப்பி ஆரோக்கியத்தை அதிகரித்து பாலுணர்வை தூண்டுகிறது.
சியா விதைகள்:
ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டுவதில் சியா விதைகள் சிறந்ததாக விளங்குகின்றன. இவை இயற்கை முறையில் டெஸ்டோஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்கின்றன. டெஸ்டோஸ்ட்டிரோன் ஹார்மோன் பாலுணர்ச்சியை தூண்டுவதில் உதவுகிறது.
மிளகு:
மிளகில் உள்ள காப்சைசின் என்னும் கூறு இதய துடிப்பை அதிகரிக்கிறது, இரத்த நாளங்களை தளர்த்துகிறது, எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன் ஆகும்.
வாழைப்பழம்:
பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி போன்றவற்றின் ஆதாரமாக விளங்குவது வாழைப்பழம். இது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. மேலும் வாழைப்பழத்தில் ப்ரோமிலைன் என்னும் நொதி உள்ளது. இது அன்னாசி பழத்திலும் காணப்படுகிறது. இந்த நொதி ஆண்களின் காம உணர்ச்சியை தூண்ட உதவுகிறது.
பூசணி விதைகள்:
பொதுவாக பலராலும் நிராகரிக்கப்படும் ஒரு விதை இந்த பூசணி விதை. ஆனால் இந்த பூசணி விதை ஜின்க் சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. ஆண்களின் பாலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் செயலாற்ற இந்த விதைகள் உதவுகின்றன. இவற்றை சிற்றுண்டியாக உட்கொள்ளலாம்.
ப்ரோக்கோலி:
பொதுவாக பல ஆண்களால் ஒதுக்கப்படும் ஒரு காய் ப்ரோக்கோலி. ஆனால் அது அவர்களுக்கு ஒரு பெருத்த இழப்பைத் தரும். ப்ரோக்கோலியில் இண்டோல்-3-கார்பினால் உள்ளது. இது ஆண்களில் ஈஸ்ட்ரோஜென் அளவைக் குறைத்து, அவர்களுக்குத் தேவையான காம உணர்வைத் தூண்டுகிறது.
உடல்நலம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS ல் பெறுவதற்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.