கையடக்க தொலைபேசிக்காக தற்கொலை செய்த பாடசாலை மாணவன்!
மாத்தறையில் பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ரொட்டும்ப, பல்லேகந்த பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள பெற்றமையினால் இவ்வாறு குறித்த மாணவன் தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியந்துள்ளது.
மாணவன் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை தவறாக பயன்படுத்தியமையினால் பெற்றோர் அதனை மீளப் பெற்றுள்ளனர். எனினும் தன்னிடம் இருந்து கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள எடுத்துக் கொண்டமையினால் மனவிரக்தியில் மாணவன் தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.