சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடரந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமைப்போன்று மீள திறக்கப்படுகின்றது.
மேலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான முன்னைய சுற்றறிக்கைக்கு அமைய அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதேவேளை மேற்கு மாகாணத்திலும் முன்பள்ளிகள் மற்றும் தனியார் பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.