
இந்திய நிறுவனம் நடத்திய புதிய கணிப்பில் சஜித் முன்னிலை..!
இந்திய நிறுவனம் நடத்திய புதிய கணிப்பில் தற்போது சஜித் பிரேமதாசவே முன்னிலையில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கை பிரதானி சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
மேலும் நேற்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததுடன் வெளிநாட்டு முதலீட்டை பெறும் போது இலஞ்சம் ஊழலை இடமளிக்கமாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போது திருடர்களுடனே ரணில் விக்கிரமசிங்க கூட்டணி சேர்ந்துள்ளார். உண்மையில் அவருடன் அரசியல் செய்தமை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.