விரைவில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன மின்சார விமானத்தின் சோதனை ஓட்டம்!
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் அதிவேக மின்சார விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
விமானங்கள் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைட் வெளியிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார விமானத்தை ரோல்ஸ்ராய்ஸ் வடிவமைத்துள்ளது. 500 குதிரைதிறன் ஆற்றல் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த விமானம் மணிக்கு 480 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என்றும், விமானத்தின் பேட்டரிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 475 கிலோமீட்டர் தூரம் பறக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஓடுபாதையில் விமானத்தை கட்டி இழுப்பதற்காக ஜாகுவார் நிறுவனத்தின் ஐ-பேஸ் (I-Pace) ரக மின்சார கார்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஜாகுவார் (Jaguar ) நிறுவனமும் அடுத்த 18 ஆண்டுகளில் கார்பன் வெளிப்பாட்டை முற்றிலுமாக குறைத்து விட தீர்மானித்துள்ளதால் அந்நிறுவனத்தின் கார்களை விமானத்தை கட்டி இழுக்க பயன்படுத்தப்போவதாக ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.