இலங்கையில் “டெல்டா” பரவும் அபாயம் அதிகம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கொரோனா வைரஸின் “டெல்டா” திரிபு எதிர்காலத்தில் நாட்டில் அதிக அளவில் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
பல்வேறு கொரோனா தொற்று வகைகள் இப்போது உலகின் பல நாடுகளில் பரவி வருவதாகவும், அந்த வகையில் இலங்கையிலும் டெல்டா வகை பரவும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அனுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“டெல்டா வகை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கையால் மட்டும் அதிலிருந்து விடுபட முடியுமென்று நான் நினைக்கவில்லை.
எனவே, எதிர்காலத்தில் டெல்டா நம் நாட்டில் அதிகம் காணப்படும் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், ஸ்புட்னிக் தடுப்பூசி டெல்டா வகைகளுக்கு எதிராக செயற்படுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் எமது நாட்டில் தற்போது சைனோஃபார்ம், அஸ்ட்ராசெனெகா, மாடர்னா மற்றும் ஃபைசர் போன்றவை மக்களுக்கு போடப்படுகின்றன.
அத்தோடு அந்த வகையில் தடுப்பூசி பெறுபவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட, டெல்டா விகாரத்தால் பாதிக்கப்படுவது குறைவு. எனவே, தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.