நீதியற்ற ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – ரணில்
சட்ட ஆட்சியை துளியளவும் பின்பற்றாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு நாடாளுமன்ற தேர்தலில் தக்க பதிலடியை வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நிகழ்ந்த கறுப்பின படுகொலைக்கு நீதி கோரி சோஷலிச கட்சியினரால் கொள்ளுபிட்டியவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் போலீசாரின் அத்துமீறலை கண்டித்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆட்சியில் நீதி கோரி எந்த போராட்டம் நடந்தாலும் இறுதியில் சிறை செல்லும் நிலை ஏற்படுகின்றது என மேலும் கூறினார். இந்த அட்டுழியங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.