ரணில் வைத்த ஆப்பு!
அண்மையில் சஜித் அணியை சேர்ந்த மங்கள சமரவீர தான் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இவர் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் விருப்பிலக்கம் வெளியிடப்பட்ட நிலையில் இந்த முடிவை வெளியிட்டிருந்தார்.
தற்போது இந்த முடிவுக்கு காரணம் ரணில் வகுத்த வியூகம் என முன்னாள் அமைச்சர் வஜிர அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு தடவையும் சஜித்தின் திட்டங்களை தவிடுபொடியாக்க ரணில் தனது அனுபவத்தை பயன்படுத்தி பல ராஜதந்திர செயற்பாடுகளை செய்துவருகிறார் என்று மேலும் கூறியுள்ளார்.
மங்கள சமரவீர எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பலம் குறைவடைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.