
விபசார விடுதி சுற்றிவளைப்பு – நான்கு பெண்கள் கைது
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த சமூகப்பிறழ்வான விடுதி ஒன்றினை (11) பொலிஸார் முற்றுகையிட்டு அங்கிருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுர்வேத ஸ்பா நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செயற்பாடுகள் நடைபெறுவதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நுவரெலியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு திடீர் என சோதனையிட்டு குறித்த மசாஜ் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21,25,34,34 வயதுக்கிடையவர்கள் எனவும் இவர்கள் வெளிமடை, இரத்தினபுரி. கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதில் விபச்சார விடுதி நிர்வாகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் தடுத்து வைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.