
உல்லாச விடுதியில் சிக்கிய பாடசாலை மாணவன்!
இணையவழி கல்விக்காக மாணவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இணையக்கற்கைக்காக ஸ்மார்ட் தொலைபேசியை பாவித்து வந்த பாடசாலை மாணவனொருவன் சில தினங்களின் முன்னர் பாலியல் விடுதியொன்றில் சிக்கியிருந்தார்.
பம்பலப்பிட்டியிலுள்ள விடுதியொன்றை பொலிசார் சுற்றிவளைத்த போது அங்கிருந்த சில விபச்சார அழகிகள் கைது செய்யப்பட்டனர். அங்கு உல்லாசத்திற்காக சென்ற சில ஆண்களும் சிக்கினர். அதில் பாடசாலை மாணவனொருவனும் உள்ளடக்கம்.
கொரோனா தொற்றினால் முடக்க நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இணையத்தை பாவிப்பவர்களின் தொகை அதிகரித்தது. மாணவர்களும் இணையவழி கற்கைக்கு மாறினர்.
இந்த நிலையில், கொழும்பில் விபச்சார வலையமைப்புக்கள் இணையங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. நூதனமான விளம்பரங்கள் மூலம் அவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறார்கள்.
இந்த வலையமைப்பில் பாடசாலை மாணவர்கள் பலர் சிக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளையடுத்து, கொழும்பில் இணையவழி விளம்பரங்களின் மூலம் 15 விபச்சார மையங்கள் இயங்குவதாக பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அங்கு பாலியல் தொழில் புரியும் 235 யுவதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.