
போர்ட் சிட்டியை தொடர்ந்து கடலை மூடி உருவாகவுள்ள பிரமாண்ட தீவு!
Port City என அழைக்கப்படும் கொழும்பு சர்வதேச நிதி நகரம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஒரு சிறப்புப் பொருளாதார வலயமும், பன்னாட்டு நிதி மையமும் ஆகும்.
இக்கரையோர நகரம் கொழும்பு காலிமுகத்திடலிற்கு அண்மையாக பல நூறு ஏக்கர் பரப்பளவு பகுதியை மண்ணால் நிரப்பி கட்டிடங்கள் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான நில மீட்புப் பணிகள் 2018 தை 2018 யில் நிறைவடைந்தன. முழுத் திட்டத்திற்குமான செலவு 15 பில்லியன் அமெரிக்க டொலராக 2017 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் உலகளவில் கவனிக்கத்தக்கதாகவும், பேசப்படுமொன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இதனை ஒத்த வகையில் டென்மார்க்கில் ஒரு பிரமாண்ட தீவு உருவாக்கப்படவுள்ளது இது தொடர்பில் ஆராய்கிறது இந்த தொகுப்பு.