பாலியல் குற்றசாட்டில் போலீஸ் OIC கைது
தமக்குக் கீழ் பணியாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் மெதிரிகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் வைத்து சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சந்தேகநபர் இன்று ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனைத் தடுக்கும் வகையிலான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் கோரி குறித்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏலவே தாக்கல் செய்த முன்பிணை கோரிக்கை ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றினால் நிராகரிப்பட்டது.