சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களுக்கு பீட்சா அனுப்பி வைப்பு!
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் உண்பதற்காக பீட்சா அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சிக்னஸ் என்ற சரக்கு ராக்கெட் மூலம் பீட்சா கடந்த இரு தினங்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ராக்கெட் நேற்று காலை சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
அதில் ஆப்பிள், தக்காளி, கிவிப்பழம் போன்றவைகளுடன் மூன்றே முக்கால் கிலோ எடை கொண்ட பீட்சாவையும் விண்வெளி மையத்தில் உள்ள 7 வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.