சீனாவில் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி!
சீனாவில் திருமணமான தம்பதிகள், 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் கடந்த 40 ஆண்டுகளாக வீட்டுக்கு ஒரு குழந்தை திட்டம் அமுலில் இருந்தது. நாட்டில் வயதானவர்கள் அதிகமாகி, உழைக்கும் மக்கள் குறைந்ததால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த விதிகள் தளர்த்தப்பட்டு, 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.
குழந்தைகளை பெற்றுக்கொண்டால் அதிக செலவு ஏற்படும் என்ற கண்ணோட்டத்தில் பலர் இருந்ததால் வருடாந்திர குழந்தை பிறப்பு ஒரு கோடியே 20 லட்சம் என்ற மிகக் குறைவான நிலையை எட்டியிருக்கிறது.இதனால் குழந்தை பிறப்பு கொள்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ள சீனா, இனி 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.