5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நாளாந்த வேதனத்திற்காக தொழிலில் ஈடுபடுவர்களுக்கும், வேறு வருமானம் இல்லாதவர்களுக்கும், அரச ஊழியர் அல்லாதவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனை நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
பெரும்பாலும் அடுத்த வாரம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படலாம். எனினும் இந்த கொடுப்பனவை அனைவருக்கும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,
இந்த மாதம் 31ஆம் திகதி முதல் 10,000 ரூபாவிற்கு 10 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.