கூந்தலுக்கு நன்மை செய்யும் ஆரஞ்சு தோல்! பயன்படுத்துவது எப்படி ?
தலைமுடி பிரச்சனைகளுக்கு ஆரஞ்சு தோல் கொண்டு குணப்படுத்த முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க் தலைமுடி பிரச்சனையை போக்க கூடும்.
- ஆரஞ்சு தோல் அழுக்கு மற்றும் எண்ணெய் நீக்கும் சிறந்த பொருள். இது கிருமி நாசினியாகவும் கூந்தலில் செயல்படுகிறது. இது உச்சந்தலையில் தொற்று உண்டாவதற்கு எதிராக செயல்படுகிறது. முடி அமைப்பை மேம்படுத்த செய்கிறது. இது முடி அமைப்பை குறுகிய காலத்தில் சரி செய்கிறது. இந்த ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க் முடி உதிர்தலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கான ரெஸிபி குறித்து பார்க்கலாம்.
ஆரஞ்சு தோல் மற்றும் தயிர்
இந்த ஹேர் மாஸ்க் பொடுகு மற்றும் உலர்ந்த உச்சந்தலைக்கு எதிராக போராடக்கூடியது. இது தலைமுடி மற்றும் கூந்தலின் வேர்களுக்கு வலுவூட்ட செய்கிறது. இது முடி உதிர்தலையும் தடுக்க செய்கிறது.
வைட்டமின் ஈ மாத்திரை
ஆரஞ்சு தோல் பவுடர் – 2 டீஸ்பூன்
தயிர் – கால் கப்
ஆரஞ்சு தோலில் 1 கப் தயிர் கலந்து அடர்ந்த பேஸ்ட் ஆக தயாரிக்கவும். இதை முடி மற்றூம் உச்சந்தலையில் தடவி எடுக்கவும். இதை விரல் நுனியில் மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்து மந்தமான நீர் கலந்து கண்டிஷனருடன் அலசி எடுக்கவும். இதை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.
ஆரஞ்சு தோல் மற்றும் ஆலிவ்
ஆலிவ் எண்ணெய் ஹேர் மாஸ்க் உச்சந்தலையில் தொற்று நோய்களுக்கு எதிராக போராடும் ஹேர் மாஸ்க். தொற்று நோயை தடுக்க இது சிறந்த தீர்வாக இருக்கும். சிட்ரஸ் பொடுகு மற்றும் உச்சந்தலையில் உண்டாகும் பொடுகை விரட்ட உதவுகிறது. இது உச்சந்தலையின் துளைகளிலிருந்து அசுத்தங்களை நீக்க செய்கிறது.
ஆரஞ்சு தோல் – 2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்
ஆரஞ்சு தோல் பவுடரை ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக சேரும் வரை கலந்து எடுக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி எடுக்கவும். சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து இலேசான ஷாம்பு மற்றும் மந்தமான தண்ணீரில் அலசி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு இதை செய்து வரவும்.
ஆரஞ்சு தோல் மற்றும் தேன்
இது முடிக்கு சிறந்த மாஸ்க் ஆகும். இது சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது இது மென்மையான பளபளப்பான மற்றும் அழகான முடியை பெற இந்த மாஸ்க் உதவுகிறது. இது முடி அமைப்பை மேம்படுத்த மயிர்க்கால்களுக்கு வலுவை அளிக்கிறது.
ஆரஞ்சு தோல் பவுடர் – 2
தேன் – 1 டீஸ்பூன்
ஆரஞ்சு தோல் பவுடரை தேனில் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் அமைக்கவும். இதை கூந்தலில் மயிர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி எடுக்கவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசி எடுக்கவும்.
ஆரஞ்சு தோல் மற்றும் தேங்காய் எண்ணெய்
ஆரஞ்சு தோல் உடன் தேங்காய் எண்ணெய் முடி மாஸ்க் வறட்சியான கூந்தலுக்கு எதிரானது. இது பொடுகு நீங்க மட்டும் அல்லாமல் உச்சந்தலை வறட்சியை சிறப்பாக நீக்க கூடியது. இது மென்மையான பளபளப்பான முடியை அளிக்க கூடும்.
ஆரஞ்சு தோல் – 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
ஆரஞ்சு தோலுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் நன்றாக தேய்க்கவும். மயிர்க்கால்களில் இந்த பேஸ்ட் முழுவதுமாக இருக்கட்டும். 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி எடுக்கவும்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.