fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

ஒப்போ K9 5G அறிமுகம்: எதிர்பார்த்ததை விட கம்மி விலை; வேற லெவல் அம்சங்கள்!

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போனாக… ரூ.25000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டின் கீழ்… ஒப்போ கே9 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Oppo K9 5G Price Specs

  • ஒப்போ கே9 5ஜி அறிமுகம்
  • கேமிங் திறன்களை கொண்டுள்ளது
  • ரூ.21,600 முதல் வாங்க கிடைக்கும்

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ஒப்போ கே9 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை வ;வழங்குகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 5 நிமிட சார்ஜிங்கில் 2 மணிநேர இயக்க நேரத்தை வழங்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அதன் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க இதில் 3 டி லிக்விட் கூல் சிஸ்டத்தையும் பேக் செய்கிறது.

இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனுடன், ஒப்போ நிறுவனம் அதன் என்கோ ஏர் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (டிடபிள்யூஎஸ்) இயர்போன்ஸ், ஒப்போ கே 9 ஸ்மார்ட் டிவி மற்றும் ஒப்போ பேண்ட் ஆகியவைகளையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனின் விலை:

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.21,600 க்கும், மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது தோராயமாக ரூ.25,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் வருகிற மே 11 முதல் பிளாக் மற்றும் கிரேடியண்ட் வண்ண விருப்பங்களில் இது விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச கிடைக்கும் தன்மை குறித்து இதுவரை எந்த வார்த்தையும் இல்லை.

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 11.1
– டூயல் சிம் (நானோ) ஆதரவு
– 6.43 இன்ச் புல் எச்டி + (1,080×2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
– 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
– 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங்
– 91.7 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி
– 20: 9 திரை விகிதம்
– 410ppi பிக்சல் அடர்த்தி

– குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 ஜி SoC
– அட்ரினோ 620 ஜி.பீ.யு
– 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்

– கேமிங்கின் போது ஸ்மார்ட்போனின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க வெப்பச் சிதறலை குறைக்க வி.சி லிக்விட்-கூல்டு ஹீட் சின்க் காப்பர் பிளேட் மற்றும் மல்டி லேயர் தெர்மல் கன்டெக்ட்டிவ் கிராஃபைட் ஷீட்

– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்)
– 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்)
-2 மெகாபிக்சல் (f / 2.4 லென்ஸ்) மேக்ரோ ஷூட்டர்
– 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் (எஃப் / 2.4)

– வைஃபை 5, 5 ஜி, ப்ளூடூத், 3.5 மிமீ ஹெட்ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
– 4,300 எம்ஏஎச் பேட்டரி
– 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
– 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும்
– அளவீட்டில் 159.1×73.4×7.9 மிமீ
– எடையில் 172 கிராம்.

ஃபெர்பார்மன்ஸ்Qualcomm Snapdragon 870 5G – 7 nm
டிஸ்பிளே6.5 inches (16.51 cm)
சேமிப்பகம்128 GB
கேமரா64 MP + 8 MP + 2 MP + 2 MP
பேட்டரி4300 mAh
price_in_india22999
ரேம்8 GB

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button