அலுவலகங்களில் எதிர்நோக்கும் சிக்கல்கள்!
எமக்குத் தெரிந்த பல வேடிக்கை மனிதர்கள் எம்மைச் சுற்றியுள்ளனர்.அவர்களை நாம் தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அவர்கள் எம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருப்பார்கள் ஆனால் நாம் நேரில் பார்த்த சில வேடிக்கை மனிதர்கள் எம்மை வேதனைப்படுத்தி, கடினமான சூழலுக்குள் தள்ளியிருப்பார்கள்.
அவர்கள் பல ரூபங்களில் எம்மைச் சுற்றியிருப்பார்கள், நாம் பணியாற்றும் நிறுவனங்களின் தலைவர்களாயிருப்பார்கள், எம்முடன் பணியாற்றும் சக ஊழியர்களாக, நண்பர்களாக, எமக்குத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
முதன்முதலில் வேலைக்குச் செல்லும் ஒருவனுக்கு அவனுடைய நிறுவனத் தலைவரே முன்னோடியாய் இருப்பார்கள். அவனின் தலைமைத்துவப் பண்புகள் தன்னுடைய தலைவனைப் பார்த்தே உருவாகின்றது. நாம் ஒவ்வொருவரும் வேலைக்குச் சென்று எவ்வளவு காலமிருக்கும்.
நாம் எத்தனை வேலைகளைக் கடந்து வந்திருப்போம், ஆனால் எம்மை ஈர்த்த அல்லது நாம் கண்டு வியந்த தலைவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கும். ஏனெனில் இன்று பணியாளர்களாக இருக்கின்றார்கள் ஆனால் தலைவர்கள் அவ்வாறில்லை.
தலைமைத்துவம் என்பது முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயங்களிலேயே தங்கியுள்ளது. இன்றைய தலைமைத்துவப் பண்புகள் முழுமையாக மாறிவிட்டது. கையிலிருக்கும் அதிகாரம்,செல்வாக்கு மற்றும் மாதாந்த சம்பளம் என்பன வெறும் தோற்ற வெளிப்பாடுகளாகவும் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் கருவிகளாகவுமே உள்ளன.
முடிவெடுக்கும் அதிகாரம் ஒருநிலைப்படுத்தப்பட்டிருக்கும் போது பணியாளர்களால் எதுவும் செய்யமுடியாது.இன்று வேறு வேலை உடனடியாக எடுப்பது கடினம் என்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களை சக்கையாகப் பிழிவதும் பின்னர் ஏதாவது பிழைகள் நேரும் இடத்தில் அதை அவர்கள் மீதே போட்டு அவர்களை வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேசுவதும் அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
சில இடங்களில் தீர்மானம் எடுக்கும் போது எல்லோரையும் கலந்தாலோசித்தே முடிவெடுப்போம் என்பர்,ஆனால் அங்கு நிறுவனத்தலைவரின் செல்வாக்கு கூடுதலாக இருக்கும். ஆயினும் பணியாளர்கள் தம்முடைய முடிவில் உறுதியாய் நின்றால் அதைத் தோற்றுப்போகும் வண்ணம் சில காரியங்களைச் செய்து அவர்கள் முடிவு பிழை என்றும் தங்கள் முடிவே சிறந்தது என்றும் கூறுவர்.
தலைவரின் அபிமானத்தைப் பெறாவிட்டால் ஒருவர் தொடர்ச்சியாக அங்கு பணிபுரிவது மிகக்கடினமான காரியமாகவிருக்கும்.
ஒருவனின் இயலாமையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை தமது சுயலாபங்களுக்குப் பயன்படுத்துவதெல்லாம் மிகச் சாதாரண விடயமாக தற்போது உள்ளது. தலைவர்கள் தமது கதிரையை காத்துக்கொள்ள அவர்களு செய்யும் வேலைகள் அனைவரும் அறிந்ததே.
தமது பிழையான முடிவுகளுக்கு பணியாளர்களைப் பலிக்கடா ஆக்குவதெல்லாம் அவர்களுக்கு மிகச் சாதரணம். இவ்வாறான தலைவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களின் நிலைமை ஆப்பிழுத்த குரங்கைப் போன்றே இருக்கும். அவர்களின் வேதனையும் கண்ணீரும் பணியாற்றும் இடங்களிலுள்ள சுவர்களும் கற்களுமே அறியும்.
அநீதிக்கு எதிராகப் பேசுபவர்களின் குரல்வளை நசுக்கப்படும் இக்காலங்களில் சுயமரியாதையும் தெளிவான எண்ணமுமே எம்மை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்.
இவ்வாறான மனிதர்கள் அல்லது தலைவர்களை நாம் வேடிக்கை மனிதர்கள் என்ற தொகுதிக்குள் உள்ளடக்கும் போது அவர்கள் செய்யும் அனைத்து தவறான செயல்களும் எமக்கு சிரிப்பையே உண்டுபண்ணும். ஏனெனில் எம்மைவிட பணத்திலும் செல்வாக்கிலும் அதிகாரத்திலும் உயர்ந்தவர்கள
் ஆனால் மனிதர்களை மதிக்கத்தெரியாதவர்கள் எனும் போது நாம் அவர்களைப் போல் அல்லாது மனிதனை மனிதனாக நடத்தும் இயல்பு எம்மை அவர்களை விட உயரத்தில் வைத்திருக்கும். எமக்கு மற்றவர்களை செய்வதை நாம் மற்றவர்களுக்குச் செய்யாது இருப்போம்.
இன்று ஒரு நிறுவனம் உயர்ந்திருக்கும் போது அதற்கு பின்னால் பல பணியாளர்களின் வேதனையும் இழப்புகளும் அயாராது வ்ழங்கிய உழைப்புமே காரணமாகும். இவ்வாறான வேடிக்கை மனிதர்களைக் குறித்து நாம் அதிகம் கவலைப்படத்தேவையில்லை.
அவர்கள் எமக்குச் செய்யும் ஒவ்வொரு நெருக்குதலையும் உதறித்தள்ளிவிட்டு அதற்கு மேல் நாம் எழும்பவேண்டும். எமது தன்மானமும் நேர்மையும் எம்மை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றும்.
வேடிக்கை மனிதர்கள் வீழ்வது உறுதி,ஆனால் பல வேடிக்கை மனிதர்களைப் போல நாமும் விழக்கூடாது
வாழ்க்கைமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்